ஹாரிஸ் ஜெயராஜை கழற்றிவிட்ட ஹரி…! – சிங்கம்-3 படத்தை காலி பண்ணிய கடுப்பு?

dsp

சினிமாவில் எதையுமே வெற்றிதான் தீர்மானிக்கும்.

அங்கே நட்புக்கு எல்லாம் இடமே இல்லை.

இயக்குநர் ஹரியும், ஹாரிஸ் ஜெயராஜும் நெருங்கிய நண்பர்கள்.

இவர்களைவிட இவர்களுடைய திருமதிகள் இருவரும், அதாவது திருமதி. ப்ரீத்தா ஹரியும், திருமதி ஹாரிஸ் ஜெயராஜும் நகமும் சதையும்போல் எந்நேரமும் ஒன்றாகவே இருப்பார்கள்.

வாக்கிங் போவது முதல் ஷாப்பிங்போவது வரை இருவரும் சேர்ந்தேதான் இருப்பார்கள்.

ஹரி, ஹாரிஸ் உடைய திருமதிகள் என்னதான் நட்பாக இருந்தாலும், தொழில் என்று வரும்போது, இதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார் ஹரி.

 

அவர் கடைசியாக இயக்கிய சிங்கம்- 3 படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைப்பாளர்.

என்ன பிரயோஜனம்?

படம் வெளியாவதற்கு முன்பே 100 கோடி க்ளப்பில் சேர்ந்துவிட்டதாக வெட்கமில்லாமல் பில்ட்அப் பண்ணியும் ஒன்றிரண்டு நாட்கள் கூட சிங்கம்-3 படம் ஓடவில்லை.

அந்த வாய்ப்பை கெடுத்தது ஹாரிஸ் ஜெயராஜ் உடைய இசையும், பின்னணி இசையும்தான்.

அதனால் தன்னுடைய அடுத்தப் படமான சாமி 2க்கு கண்டிப்பாக ஹாரிஸ் வேண்டாம் என்ற முடிவை எப்போதோ எடுத்துவிட்டார் ஹரி.

அந்த முடிவை தற்போது அறிவித்திருக்கிறார்.

புலி, இருமுகன் ஆகிய படங்களை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் சாமி 2 படத்தை இயக்கவிருக்கிறார் ஹரி.

இந்தப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா, கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்கள்.

ஜூலை மாதத்தில் இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

தேவி ஸ்ரீபிரசாத் ஏற்கனவே ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

அந்தப் படங்களின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருந்தன.

அதே போல் விக்ரம் நடித்த கந்தசாமி படத்துக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் பாடல்களும் பெரிய வெற்றியைப் பெற்றன.

சாமி 2 படத்தில் விக்ரம் + ஹரி + தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது.