இறந்துபோன நண்பனை இழிவுபடுத்திய இயக்குநர் ராம்…

taramani

மறைந்த தலைவர்களது பெயரை ஒரு சாலைக்கோ, ஒரு கட்டிடத்துக்கோ, ஒரு பாலத்துக்கோ சூட்டுவது என்பது குறிப்பிட்ட அந்தத் தலைவருக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.

அவரை கௌரவப்படுத்தும் வழிகளில் ஒன்று.

மறைந்த ஒரு தலைவரின் பெயரை ஒரு சாராயக்கடைக்கோ… விபச்சார விடுதிக்கோ சூட்டினால்?

இப்படி ஒரு இழிவான காரியத்தைத்தான் செய்திருக்கிறார் இயக்குநர் ராம்.

இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியாகி இருக்கும் தரமணி படத்தின் கதாநாயகி (ஆண்ட்ரியா) கணவனைப் பிரிந்து குழந்தையுடன் வசிப்பவர்

கணவனை ஏன் பிரிந்து வந்தார் என்பதை ஒரு காட்சியில் விவரிக்கிறார் ஆண்ட்ரியா.

அவரது கணவர்… ஒரு ஓரினச் சேர்க்கையாளர்.

இன்னொரு ஆணுடன் அவர் உடலுறவு கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார் ஆண்ட்ரியா.

அதன் தொடர்ச்சியாய் ஆண்ட்ரியாவும் அவரது கணவனும் பிரிந்துவிடுகின்றனர்.

ஓரினச் சேர்க்கையாளரான ஆண்ட்ரியாவின் கணவனுக்கு இயக்குநர் ராம் சூட்டியுள்ள பெயர்… ஜேக்கப்.

அதே பெயரில் இருக்கும் ஒரு பத்திரிகையாளர், ‘என்ன சார் என் பேரை வச்சுட்டீங்க? எல்லாரும் என்னை கிண்டல் பண்றாங்க’ என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டார்.

அவரை சமாதானப்படுத்துவதற்காகவோ என்னவோ… நேற்று நடைபெற்ற பிரஸ்மீட்டில் பேசும்போது, அந்த கதாபாத்திரத்துக்கு ஜேக்கப் என்று பெயர் வைத்ததற்கான காரணத்தை விவரித்தார் இயக்குநர் ராம்.

சில வருடங்களுக்கு முன்புவரை பிரபல சமையல்கலை வல்லுநராக விளங்கியவர் ஜேக்கப்.

பல்வேறு தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலம் பிரபலமாக விளங்கிய ஜேக்கப் ஏராளமான சமையல் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

துடிப்பான இளைஞரான ஜேக்கப் மிக இளவயதிலேயே மரணமடைந்தார்.

அந்த ஜேக்கப்…. இயக்குநர் ராமுடைய நண்பராம்.

தன்னுடைய நண்பரான அந்த ஜேக்கப் பெயரைத்தான் தரமணி படத்தில் ஓரினச்சேர்க்கையாளர் கதாபாத்திரத்துக்கு சூட்டினாராம் ராம்.

மறைந்த நண்பனை இதைவிட கேவலமாக யாரும் நினைவுகூர்ந்திருக்க முடியாது.

ஹே..ராம்…