தனுஷ்  படத்தை  கைவிட்ட தயாரிப்பாளர்…!

dhanush1

 

‘இறைவி’ படம் தயாரிப்பில் இருந்தபோது, கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் தனுஷ்.

அந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால், இறைவி படம் வெளியாகி படு தோல்வியடைந்ததால் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதை தள்ளிப்போட்டார் தனுஷ்.

அடுத்தடுத்து வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்ததால் தனுஷ் சொன்னபடி கார்த்திக் சுப்பாராஜுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை.

எனவே, வெறுத்துப்போன கார்த்திக் சுப்பாராஜ் பிரபுதேவாவை வைத்து ‘மெர்க்குரி’ படத்தை இயக்கினார்.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்பாராஜுக்கு கிடைத்தது.

ரஜினி படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கப்போகிறார்.

அந்தப்படத்தை தயாரிப்பதாக இருந்த ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தற்போது தயாரிப்பிலிருந்து விலகிக்கொண்டுவிட்டது.

மெர்சல் படத்தினால் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தினால் பண நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.

தேனாண்டாள் பிலிம்ஸ் விலகியதை அறிந்த ‘விக்ரம் வேதா’படத்தைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க முன் வந்திருக்கிறது.