தள்ளிப்போன சரத்குமார் படம்…

chennaiyil-oru-nal-2b

சரத்குமார் நடித்த சென்னையில் ஒரு நாள் படம் ஓகோவென ஓடவில்லை என்றாலும் சுமாராக ஓடியது.

அதனால், அறிமுக இயக்குநர் ஜே.பி.ஆர். இயக்கத்தில் சரத்குமார் நடித்த படத்துக்கு ’சென்னையில் ஒரு நாள்-2’ என்று பெயர் வைத்தனர்.

இரண்டு படங்களின் கதைககளுக்கும் தொடர்பு இல்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் ஒரு கவனஈர்ப்பு கிடைக்கும் என்பதால் இந்த தலைப்பை வைத்தனர்.

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படம் இம்மாதம் 15 ஆம் தேதி வெளியாகவிருந்தது.

விஷாலின் ‘துப்பறிவாளன்’, ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ மற்றும் ‘யார் இவன்,’ ‘களத்தூர் கிராமம்’ ’கோம்பே’ உட்பட சில படங்கள் வெளியாவதால் சென்னையில் ஒரு நாள் -2 படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம்.

100 தியேட்டர்களுக்கு குறைவாக வெளியிட்டால் மிகப்பெரிய நஷ்டம் வரும் என்பதால் படத்தின் வெளியீட்டு தேதியை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

அதாவது தீபாவளிக்கு முந்தைய வாரங்களில் வெளியிட உள்ளனர்.

இது குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘வருகிற 15-ஆம் தேதி வேறு சில படங்கள் வெளியாகவிருப்பதால் எங்களின் ‘சென்னையில் ஒரு நாள்-2’ பட ரிலீஸை தள்ளி வைக்கிறது. ஒரே நாளில் பல படங்கள் வெளியாகும்போது வியாபார ரீதியில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கேட்டுக் கொண்டதன் படி ‘சென்னையில் ஒரு நாள்-2’வின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.