பிரபுதேவா நடிக்கும் சார்லி சாப்ளின்- 2 படத்தின் கதை… Comments Off on பிரபுதேவா நடிக்கும் சார்லி சாப்ளின்- 2 படத்தின் கதை…

தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனமான அம்மா கிரியேசன்ஸ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தை தொடர்ந்து சார்லி சாப்ளின் -2 படத்தையும் தயாரிக்கிறது.

சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த பிரபுதேவாவே இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார்.

2002 ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் படம் வெளியாகி தமிழில் வெற்றி பெற்றதுடன் இந்தியில் சல்மான்கான் நடிப்பில் “நோ எண்ட்ர ” தெலுங்கில் “பெல்லம் ஊர் எல்தே” மலையாளத்தில் ஜெயராம் பாவனா நடிப்பில் “ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்” கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் நடிப்பில் “அல்லா புல்லா சுல்லா” மற்றும் போஜ்பூரி, ஒரியா, மராத்தி போன்ற இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

சார்லி சாப்ளின் முதல் பாகத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரமே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா ஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். இந்தி மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையான அதாஷர்மா தமிழில் அறிமுகமாகும் படம் இது.

ஒளிப்பதிவு – செளந்தர்ராஜன்

இசை – அம்ரீஷ்

பாடல்கள் – யுகபாரதி, ஷக்திசிதம்பரம்.

கலை – ஆர்.கே.விஜய்முருகன்

நடனம் – ஜானி / எடிட்டிங் – பென்னி

வசனம் – கிரேஸி மோகன்

தயாரிப்பு – டி.சிவா

கதை திரைக்கதை எழுதி இயக்கும் ஷக்தி சிதம்பரம் சார்லி சாப்ளின்-2 படத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?

“பிரபுதேவா நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது.

அதற்காக பிரபுதேவா குடும்பமும் நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகும்போதும் அங்கு போய் சேர்ந்த பிறகு நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே சார்லி சாப்ளின் 2.

திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ்.” என்கிறார் இயக்குனர்.

உலக காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வது பிறந்தநாள் விழா இந்த வருடம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் இருக்கும்” என்கிறார் தயாரிப்பாளா் டி.சிவா.

சார்லி சாப்ளின்-2 படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
இருபது நிமிடக்காட்சி நீக்கம்…! – கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர்

Close