பிரம்மா.காம் – விமர்சனம்

brammadotcom

 

நகுல் வேலைபார்க்கும் விளம்பர நிறுவனத்தில் சி.இ.ஓ. சித்தார்த் விபின்.

மாடலான அஷ்னா சவேரி மீது நகுலுக்கு காதல்.

தனது பிறந்த நாளன்று கோவிலுக்குச் செல்லும் நகுல், தான் விரும்புகிற வேலையும், வாழ்க்கையும் தனக்கு அமைய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறார்!

அவரது வேண்டுதலின்படி அடுத்தடுத்து எதிர்பாராத சம்பவங்கள்.

கம்பெனியின் தலைமை அதிகாரியாகிறார் நகுல்.

அவர் பார்த்த நிகழ்ச்சி தயாரிப்பாளராக மாறுகிறார் சித்தார்த் விபின்.

வாழ்க்கையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் நகுலை மகிழ்ச்சியடைய வைக்காமல் மனம் வருந்த வைக்கிறது.

மீண்டும் தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கிறார் நகுல்.

அவருடைய எண்ணம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் பிரம்மா.காம்.

ஃபேஸ்புக் பக்கத்தில் பிரம்மாவிடம் இருந்து நகுலுக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வருவது, நகுலின் வாழ்க்கையில் அடுத்து நடக்கவிருக்கும் விஷயங்கள் வருவது என்றெல்லாம் லாஜிக் பற்றி யோசிக்காமல், காமெடியாக ஒரு ஃபேண்டசி படத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.எஸ்.விஜயகுமார்.

காமெடி வொர்க்அவுட்டாகாமல் போனதால் ஃபேண்டசி படம் என்ற அளவிலேயே இருக்கிறது பிரம்மா.காம்.

கதையை வித்தியாசமாக யோசித்த இயக்குநர், அதை சுவாரஸ்யமாக சொல்வதில் சறுக்கியிருக்கிறார்.

தலையில் முடியே வளராத பரம்பரையை சேர்ந்த ‘மொட்டை’ ராஜேந்திரன், அவரது மகளை நகுலுக்கு திருமணம் செய்து வைக்க மேற்கொள்ளும் முயற்சிகளும், அவரிடமிருந்து தப்பிக்க நகுல் எடுக்கும் முயற்சிகளும் ஓரளவு கலகலப்பான ஏரியாக்கள்.

சித்தார்த் விபின் நடிப்பில் கவரும் அளவுக்கு இசையிலும் பின்னணி இசையிலும் கவனம்ஈர்க்கவில்லை.

ரசிகர்களின் ரசனை மாற்றத்தை கவனத்தில் கொள்ளாத பிரம்மா.காம் – காப்பி பேஸ்ட்.காம்.