ஹரிஹர ராஜா சர்மாவை எச்சரித்த விஷாலுக்கு பா.ஜ.க.வின் மிரட்டல்….

vishal-stills-002

விஜய் நடித்த மெர்சல் படம் குறித்து தமிழக பா.ஜ.க.வினர் சர்ச்சையைக் கிளப்பிவருகின்றர்.

இந்த விவகாரத்தில் விஜய் பற்றி தரக்குறைவாக கருத்து தெரிவித்து வரும் பா.ஜ.க. பிரமுகரான எச்ச ராஜா என மக்களால் அழைக்கப்படும் ஹரிஹர ராஜா சர்மா என் வட இந்தியர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக வெளியிடும் ஒரு இணையதளத்தில் பார்த்ததாக தெரிவித்திருந்தார்.

இதற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் கடுமையாய் கண்டனம் தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்ற அடிப்படையில், மக்கள் அறிந்த தலைவராக இருக்கும் ஹெச்.ராஜா இப்படி வெட்கமில்லாமல் கூறலாமா? இதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்‘ என்று எச்ச ராஜாவுக்கு எச்சரிகை விடுத்திருந்தார் நடிகர் விஷால்.

கடந்தகாலங்களில் முதுகெலும்பில்லாதவர்களாக, ஆளும்கட்சியின் அடிமைகளாக இருந்தனர் திரையுலக அமைப்புகளின் நிர்வாகிகள்.

விஷாலோ மிகவும் துணிச்சலாக எச்ச ராஜாவை விமர்சித்ததோடு எச்சரிகையும் செய்தார்.

இந்நிலையில், சென்னை, வடபழனி குமரன் காலனியில் உள்ள விஷாலின் அலுவலகத்தில் மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

விஷாலின் அலுவலகம் ஜி.எஸ்.டி-ஐ முறையாக செலுத்தியுள்ளதா என மொத்தம் 3 அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு சோதனை செய்தனர்.

இந்தியாவில் ஜி.எஸ்.டி. கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதிதான் அமல்படுத்தப்பட்டது.

ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு விஷாலின் தயாரிப்பில் வெளியான ஒரே படம் துப்பறிவாளன் மட்டுமே.

செப்டம்பர் 14 ஆம் தேதி அன்றுதான் துப்பறிவாளன் திரைப்படம் வெளியானது.

அதற்குள் மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் விஷால் அலுவலகத்தில் சோதனை போட வேண்டிய அவசியம் என்ன?

எச்ச ராஜாவின் தூண்டுதலில் மத்திய அரசு தரப்பில் இருந்து விஷாலுக்கு விடும் மிரட்டல் இது என்பதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.