பிக்பாஸ் புகழை தொலைத்த ஓவியா

oviya-biography

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த மிகப்பெரிய பாப்புலாரிட்டியை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துவிட்டார் ஓவியா.

பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகள் தேடி வந்தபோது பெரிய சம்பளம் கேட்டு அவற்றை ஏற்காமல், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘முனி-4, காஞ்சனா-3’ படத்தில் நடித்து வருகிறார் ஓவியா.

இது தவிர பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அனிதா உதீப் என்பவர் இயக்கும் இந்த படத்தில் ஆன்சன் பால் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

‘ரெமோ’, ‘சோலோ’ ஆகிய தமிழ் படங்களிலும், ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ள ஆன்சன் பால் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம்இது!

இது தவிர சமீபத்தில் சிம்பு உடன் சேர்ந்து குடியை ஆதரித்து போதையில் பாடுவதுபோல் ஒரு பாடலைப்பாடியுள்ளார்.

தவிர அடிக்கடி பப்புகளிலும், பார்ட்டிகளிலும் தன்னை மறந்து திரிகிறாராம்.

மொத்தத்தில் பிக்பாஸ் கொடுத்த புகழை ஒரே வருடத்தில் தொலைத்துவிட்டார் ஓவியா.

இவரது நடவடிக்கை காரணமாக இனிமேல் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம் என்கின்றனர் படத்துறையினர்.