ஹெச்.ராஜாவை தொடைப்பத்தால் விரட்டி அடிப்போம்…! – பாரதிராஜாவின் துணிச்சல்

Director-Bharathiraja

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதைத்போல், வட இந்தியாவைச் சேர்ந்த ஹெச்.ராஜா என்கிற ஹரிஹர ராஜா சர்மா தமிழன் என்ற முகமூடியை அணிந்து கொண்டு தமிழ்நாட்டில் நடமாடிக்கொண்டிருக்கிறார்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.

அதன் உச்சமாக, கருணாநிதியின் மகள் கனிமொழி குறித்து ஒரு கீழ்த்தரமான கருத்தை ஹெச்.ராஜா சர்மா ட்வீட்டரில் வெளிப்படுத்தி இருந்தார்.

“தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.” – இதுதான் கனிமொழி குறித்து ஹெச்.ராஜாவின் கருத்து.

கனிமொழியின் பிறப்பு குறித்த ஹெச்.ராஜாவின் ட்வீட்டுக்கு, தி.மு.க. உடன்பிறப்புகள் வழக்கம்போல் மக்களை ஏமாற்றும் சம்பிரதாயமான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் இயக்குநர் பாரதிராஜா ஹெச்.ராஜா சர்மாவுக்கு கடுமையான வார்த்தைகளில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நாக்கில் சனி பிடித்து, நாகரிகம் மறந்துபேசும் எச்.ராஜாவின் ட்விட்டர் பேச்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழகத்தில் ஆறு முறை முதல்வராக இருந்த திராவிட இயக்கத்தில் சுயமரியாதைத் தலைவர், பெரியவர் கலைஞரின் குடும்பத்தை இழிசொல்லால் இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. கலைஞரின் கைபிடித்து ராசாத்தி அம்மாளின் மகள் கனிமொழி, உனக்குத் தவறான உறவில் பிறந்தவரா?

சமீபத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பெரிய பிரச்சினையைத் திசைதிருப்ப, நீ நடத்தும் இந்த நாடகத்தை எம் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

யாரையோ காப்பாற்ற, யாரையோ பலியிடும் இந்தப் பிரச்சினையைச் சற்று உற்று நோக்குங்கள்.

அடிக்கடி தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த நினைத்து, கந்தக வார்த்தைகளை வீதியில் வீசும் எச்.ராஜா மாதிரி ஆட்களை இன்னும் வீதியில் உலவவிட்டுக் கொண்டிருக்கிறோமே… அதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு.

ஆளும் அரசியல்வாதிகள் நாகரிகம் மறந்து, இப்படி அநாகரிகமாகப் பேசி, தமிழ்நாட்டை ஒரு போர்க்களமாக மாற்ற நினைக்கும் இதுபோன்ற ஆட்களை, கடுமையான தண்டனை கொடுத்து தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்.

விழித்துக்கொள் தமிழா, விழித்துக்கொள்.

சொரணை கெட்டவர்கள் அல்ல தமிழர்கள், என்றும் துணிந்து நிற்போம்.

தாய்மார்களே… தமிழகம் உங்கள் கையில். மாணவ மணிகளே… தமிழகம் உங்கள் கையில். தொடைப்பத்தால் விரட்டி அடிப்போம் தீய சக்திகளை. ஒன்றுபடுங்கள், உரத்த குரல் கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.