தமிழுக்கு வரும் பாலகிருஷ்ணாவின் ‘பாகுபலி’

gowthami-pudhra-saathagarni-movie-trailer-launch-stills-025

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் பிரம்மாண்டமான  படமாக உருவாகி வெற்றிபெற்ற படம்  – ‘கௌதமி புத்ர சாதகர்ணி’.

பாலகிருஷ்ணாவின் 100-ஆவது படமான இந்த படத்தை கிருஷ் இயக்கியிருந்தார். இவர் தமிழில் ‘வானம்’ படத்தை இயக்கியவர்.

தெலுங்கில் வெளியாகி மிகப்பெரியவெற்றிபெற்ற இந்த படம் தமிழில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

‘ஆர்.என்.சி.சினிமா’ பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரித்துள்ள இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுடன் ஸ்ரேயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகா சுதாகர், பாலிவுட் நடிகை ஹேமமாலினி ஆகியோரும் நடித்திருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை  படத்தின் புரமோஷனுக்கும் உதவும் என்ற எண்ணத்தில் சென்னையில் நடத்தினார்கள்.

எம்.ஜி.ஆர். மற்றும் என்.டி.ஆர். ஆகியோருடன் பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகைகளான லதா, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நாட்டுக்காக போராடிய ஒரு மாவீரன் சாதகர்ணி. நாட்காட்டியை அறிமுகப்படுத்தியவர், இந்திய முழுக்க ஒரே நாணயம் இருக்க வேண்டும் என்று போராடியவர், தாய்க்கு மரியாதை செய்யும் விதமாக தன் தாயின் பெயரை இனிஷியலாக போட்டு முன் மாதிரியாக திகழ்ந்தவர் என்று பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான மாவீரன் சாதகர்ணி, மன்னர் சேரனின் நண்பராகவும் திகழ்ந்துள்ளார். நம் நாட்டுக்காக போராடிய இந்த மாவீரன் பற்றிய அதிக தகவல்கள் இந்தியாவில் இல்லாத நிலையில் லண்டன் மியூசியத்திற்குச் சென்று, தகவல்களை சேகரித்து வந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் கிருஷ்!

பிரம்மாண்ட படம் என்று சொல்லப்படும் கௌதமி புத்ர சாதகர்ணி’ படத்தை 79 நாட்களில் எடுத்து முடித்துள்ளார் கிருஷ்.

இந்த படத்தை இந்தியாவில் உள்ள பல உண்மையான அரண்மனைகளில் படமாக்கியுள்ளனர்.