வசூலில் வேதாளம் படத்தை ஓவர்டேக் பண்ணிய பைரவா…

bairavaa-stills-004

தமிழ்சினிமாவைப் பொருத்தவரை ரஜினிதான் நம்பர் ஒன். வசூலிலும் அவரே  வசூல் மன்னன்.

கமல் உட்பட மற்ற ஹீரோக்கள் எல்லோருமே அவருக்கு  கீ…………ழேதான்.

வசூலில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பது யார் என்றால்…. சந்தேகமில்லாமல்  விஜய்தான்.

அஜித்குமாருக்கு, விஜய்க்கு அடுத்த இடம்தான்.

இதை விஜய் நடித்த படங்களின் வசூல்  தொடர்ந்து நிரூபித்து வருகின்றன.

விஜய் நடித்த படம் வெளிவரும்போதெல்லாம், அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கடுமையான  எதிர்மறை கருத்துக்களை திட்டமிட்டே பரப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்டவர்களுக்கு அஜித் தரப்பிலிருந்து பணம் கொடுக்கப்படுவதாகவும் ஒரு தகவல் உண்டு.

விஜய் படங்களை அஜித் ரசிகர்கள் எத்தனை கேவலமாக விமர்சனம் செய்தாலும், அவர்களால் விஜய் படத்தை பார்க்க வரும் மக்கள் கூட்டத்தை தடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

அஜித் ரசிகர்களின் எதிர்மறை விமர்சன தாக்குதலுக்கு  பைரவா படமும் தப்பவில்லை.

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பரதன் இயக்க விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பைரவா’ படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.

தமிழ்நாட்டில் 11ஆம் தேதி நள்ளிரவு 1 மணியிலிருந்து ‘பைரவா’ படத்திற்கான சிறப்புக் காட்சிகள் தொடங்கின.

முன்பதிவும் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

இதனால் பைரவா படத்திற்கு பெரிய ஓபனிங்கும் கிடைத்தது.

உலகமெங்கும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான  பைரவா படம், இருவிதமான விமர்சனங்களைப் பெற்றாலும்  வசூலில் பாதிப்பில்லை.

பைரவா படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தின் முந்தைய விஜய் படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.

அதாவது, ‘பைரவா’ படம் முதல் நாளில் 16.61 ரூபாய் கோடி வசூல் செய்துள்ளது.

முதல் நான்கு நாட்களில் ‘பைரவா’ படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

இந்த தகவலை வெளியிட்டது பணம் வாங்கிக் கொண்டு ட்விட்டரில் கூவிக்கொண்டிருக்கும் ட்விட்டர் காக்கைகளின் ஆதாரமற்ற தகவல் அல்ல.

பைரவா படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவல்.

‘வேதாளம்’ படத்தின் முதல்நாள் வசூல் 15 கோடிதான்.

அந்தப்படத்தைவிட, ‘பைரவா’ படத்தின் முதல் நாள் வசூல் ஒன்றரை கோடிக்கு மேல் அதிகம்.

இது ஒரு பக்கம் இருக்க, ‘பைரவா’ படத்தின் காட்சிகளில் சுமார் 7 நிமிடத்தை குறைத்துள்ளனர்.

பைரவா ட்ரிம் பண்ணப்பட்டதை தொடர்ந்து வசூல் மேலும் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.