சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர ஆசைப்படும் நடிகை

athmeeya-rajan-stills-014

ஹன்சிகா, நயன்தாரா, கீர்த்திசுரேஷ், சமந்தா, ரகுல் ப்ரீத் சிங் என சிவகார்த்திகேயன் உடன் முன்னணி கதாநாயகிகள் ஜோடிபோட்டாலும், அவர் தனிகதாநாயகனாக நடித்த முதல்படத்தின் கதாநாயகி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆத்மியாதான். மனம் கொத்தி பறவை படத்தின் கதாநாயகி.

athmeeya-rajan-stills-002

அந்தப் படத்துக்குப் பிறகு தமிழ்ப்படங்களில் நடிப்பதையே மறந்துவிட்ட ஆத்மியாவை தேடிப்பிடித்து காவியன் படத்தில் கதாநாயகியாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் சாரதி.

“இது அவருக்கு முதல் படம். படம் நல்லா வரணும்னு டெடிகேஷனுடன் ஹார்ட்வொர்க் பண்ணினார். எவ்வளவு பெரிய டென்ஷனாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ரிலாக்ஸ்டாக வொர்க் பண்ணுவார். அவருக்கு நல்ல விஷன் இருக்கு.” என்று இயக்குநர் சாரதிக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார் ஆத்மியா.

athmeeya-rajan-stills-021

ஆமா… அது என்ன காவியன்?

“காவியன் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாக வந்த மாதங்கி என்ற இலங்கை தமிழ்ப் பெண்ணாக (refuge) நான் நடித்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடக்கும் கதை. அதனால முழுப்படத்தையும் அங்கேயே -லாஸ் வேகாஸிலேயே 20 நாட்கள் எடுத்தாங்க. மனம் கொத்தி பறவைக்கு அப்புறம் எனக்கு தமிழில் பெரிய கேப். அதை ஈடு செய்கிற மாதிரியான படமாக காவியன் இருக்கும்.

லவ், டூயட் என்று வழக்கமான படம் இல்லை இது. ஹாலிவுட் படம் மாதிரியான த்ரில்லர். காவியன் படத்தில் பாட்டெல்லாம் கிடையாது. படத்தின் புரமோஷனுக்காக ஒரு பாட்டு எடுத்தாங்க. நான் இன்னும் படம் பார்க்கலை. அந்தப்படத்தில் வொர்க் பண்ணினவங்க படத்தைப் பார்த்துட்டு செமயா இருக்குன்னு டெக்ஸ்ட் பண்ணி இருந்தாங்க. நான் நல்லா பண்ணியிருக்கேன் என்றும் சொன்னாங்க. காவியன் ரிலீஸுக்கு பிறகு எனக்கு நல்ல பெயர் வரும் என்று நினைக்கிறேன். தமிழில் என்னோட ரீ எண்ட்ரிக்கும் காவியன் நிச்சயமாக ஹெல்ப் பண்ணும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

athmeeya-rajan-stills-020

அமெரிக்காவில் 20 நாட்கள் படப்பிடிப்பு. அந்த அனுபவம் எப்படி?

“எனக்கு முதல் வெளிநாட்டுப்பயணம். என்னுடைய ஒரு அக்கா குவைத்திலும் இன்னொரு அக்கா கலிஃபோர்னியாவிலும் இருக்காங்க. யுஎஸ் போனதும் அக்கா கூட ஜாலியா ஊரை சுத்திப்பார்க்கலாம்னு நினைத்தேன். தொடர்ந்து ஷூட் இருந்ததால போக முடியலை. அந்த வருத்தம் இருந்தாலும் காவியன் டீமோட இருந்த 20 நாட்களும் ஜாலியா இருந்தது. முக்கியமாக…. ஷாம். சீனியர் ஆக்டராக இருந்தாலும் ரொம்ப ஃபிரண்ட்லியாக இருந்தார். சூப்பர் பெர்சன். அவர்கூட நடித்தது நைஸ் எக்ஸ்பீரியன்ஸ்.”

சிவகார்த்திகேயன் உடன் நடித்த மனம்கொத்தி பறவை படத்துக்குப் பிறகு தமிழில் இவ்வளவு பெரிய இடைவெளி ஏன்?

“நான் கன்சர்வேட்டிவ் ஃபேமிலியில இருந்து நடிக்க வந்தவ. அப்பாவோட ஃபிரண்ட் மலையாள சினிமாவுல இருக்காங்க. டைரக்டர் எழில் சார் லோகேஷன் பார்க்க கொச்சிக்கு வந்தபோது என்னுடைய ஃபோட்டோவை காட்டி அவருதான் மீட் பண்ண வெச்சார். என்னுடைய குடும்பதுல முதல்ல யாரும் ஒத்துக்கலை. படிப்புல கவனம் செலுத்தச் சொன்னாங்க. எனக்கு ஆக்ட்டிங் மீது ஆர்வம் இருந்ததால அந்தப்படத்தில் நடிச்சேன். பிறகு எனக்கும் நடிப்பில் ஆர்வம் குறைஞ்சுடுச்சு.. என்ன பண்ணனும் என்று தெரியலை. ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் படிச்சேன். பிறகு அதையும் பாதியில நிறுத்திட்டேன். இப்ப மறுபடி நடிப்பில் ஆர்வம் வந்திருக்கிறது.”

athmeeya-rajan-stills-013

காவியன் படம் தவிர வேறு என்ன படங்களில் நடிக்கிறீர்கள்?

“திருடா திருடி டைரக்டர் சுப்பிரமணியசிவா சார் இயக்கும் வெள்ளையானை படத்துல சமுத்திரகனி சார் கூட நடிக்கிறேன். அந்தப் படத்தில் வேற ஒரு கெட்டப்பில் கிராமத்து பெண்ணாகவே மாறி இருக்கேன். வெள்ளையானை படம் நல்லா வந்திருக்கு. பர்சனலா அந்தப் படம் எனக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் தந்திருக்கிறது.

காவியன் படத்துக்குப் பிறகு இந்த படத்திலும் நடிச்சதால தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் வருது. நடிப்பில் போகஸ் பண்ணலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இப்ப நான் ரொம்ப கான்ஃபிடெண்டா இருக்கேன்.

மனம் கொத்தி பறவை படத்தில் நடித்தபோது, சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய ஹீரோவாக வருவார் என்று எதிர்பார்த்தீர்களா?

“எதிர்பார்த்தேனா இல்லையா என்று தெரியலை. ஆனால் இந்த வெற்றிக்கு 100 பர்சென்ட் அவர் தகுதியானவர் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். மனம் கொத்திப் பறவை ஷூட்டிங்கில் ஒருநாள் சும்மா பேசிக்கிட்டிருக்கும்போது உங்களுக்கு பிடிச்ச கடவுள் யார் என்று நான் கேட்டேன். அதற்கு அவர், ‘நான் செய்யும் வேலைதான் கடவுள்’ என்று சொன்னார். அப்போதே அவர் பேஷனோட, ஹார்ட்வொர்க் பண்ணுவார். அதுதான் அவரை இன்றைக்கு மிகப்பெரிய இடத்துக்குக் கொண்டு போயிருக்கு.”

சிவகார்த்திகேயன் உடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆசையிருக்கிறதா?

“அவர் ரொம்ப உயரத்தில் இருக்கிறார். அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பா நடிப்பேன். இப்ப இருக்கிற தமிழ் ஹீரோயின்ஸ் எல்லோருக்குமே அவர் கூட சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற டிரீம்ஸ் இருக்கும். அது எனக்கும் இருக்கிறது.”

– ஜெ.பிஸ்மி