கத்தி படத்தின் கதை என்னுடையது என்று உரிமை கொண்டாடிய மீஞ்சூர் கோபி தன் பெயரை கோபி நயினார் என பெயரை மாற்றிக் கொண்டு இப்படத்தை இயக்கியிருந்தார்.
நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள ‘அறம்’ படத்தில் சுனுலட்சுமியும், வில்லன் நடிகர் ராம்ஸும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசை அமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள அறம் படம் கடந்த ஆயுதபூஜைக்கு வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
பிறகு தீபாவளி ரிலீசாக ‘அறம்’ திரைக்கு வரவிருக்கிறது என்று சொல்லப்பட்டது.
கடைசியில் கடந்த வாரம், நவம்பர் 10-ஆம் தேதி அறம் படத்தை ரிலீஸ் செய்தார்கள்.
தான் நடித்த படத்தின் புரமோஷனுக்கு எட்டிக்கூட பார்க்காத நயன்தாரா, அறம் படத்தின் புரமோஷனுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
படம் வெளியானதும் சென்னையில் உள்ள காசி தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக அறம் படம் மிகச்சிறந்த படம் என்ற பாராட்டைபெற்றுள்ளது.
ஆனாலும் அறம் படத்துக்கு எதிர்பார்த்த வசூல் இல்லை. சென்னையில் மல்ட்டிப்ளக்ஸ் தவிர பல தியேட்டர்களில் கூட்டமே இல்லை. தமிழகம் முழுக்க இதுவே நிலவரம்.
இதனால் 5 கோடிக்கு தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கிய டிரைடண்ட் மூவீஸ் ரவீந்திரனுக்கு 2 கோடி நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அறம் படத்தை வெற்றிப்படமாக்க இன்னும் இரண்டொரு நாளில் மீடியாக்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் நயன்தாரா.