தந்தையின் சினிமா கனவை நிறைவேற்ற மகன் தயாரித்து இயக்கும் படம் – அரளி

arali movie news

சினிமாவில் அடிக்கடி சில வித்தியாசமான, மனதை நெகிழ்விக்கும் சம்பவங்கள் நடைபெறும் அந்த வகையில் நேற்று அரளி பட இயக்குனரும் ஒரு வித்தியாசமான சம்பவத்தை நடத்தினார்.

எப்போதும் சினிமாவில் மகன் நடிப்பதற்கு ஆசைப்பட்டால் தந்தை​ ​தான் கடன் வாங்கி​யேனும் படம் தயாரிப்பார்​.​

ஆனால் இந்த அரளி பட இயக்குனர் சுப்பா​ராஜ் சற்று வித்தியாசமானவர்​.​

தந்தையின் நிறைவேறாத சினிமா கனவை நிறைவேற்ற தனது தந்தையை கதையின் கதாநாயகனாக வைத்து படம் தயாரித்துள்ளார்.

பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை நல்லவனாக வளர்வதற்கும் தவறான பாதையில் செல்வதற்கும் காரணம் எனும் கருத்தை மைய்யமாக கொண்டு நகர்கிறது அரளி.

இயக்குனரின் குணத்தையும், உழைப்பயும் ​பாராட்டி பேசிய ராதாரவி தான் விரைவில் ஒரு படம் தயாரிக்கவுள்ளதாகவும்​,​ அதில் இயக்குனராக அரளி பட இயக்குனரான சுப்பாராஜுவையே ஒப்பந்தம் செய்வேன் என்று மேடையிலேயே உறுதி அளித்தார்.

Am.Rm பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ​ஜி.எஸ்.ஜான்​ மற்றும் ​​ அணில் முத்துக்குமார் ​​இசையமைத்துள்ளனர்​.​

ஒளிப்பதிவு​:​ ராஜேஷ்​, எடிட்டிங்: விசாகன், ஆடியோகிராபர்ஸ்: பெரியசாமி, சரவணன் மற்றும் உமேஷ் பாபு.

கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் மற்றும் தயாரிப்பு​: ​ ஏ.ஆர்.சுப்பாராஜ்.

இப்படத்தில் கதாநாயகனாக ​மது சூதன், கதாநாயகியாக மஞ்சுளா​ ரதோட்​ நடிக்கிறார்கள்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனரின் தந்தை ​அருணாச்சலமும் இயக்குனர் சுப்பாராஜும் நடித்துள்ளார்.

மேலும்​ ​காளிதாஸ், அமிர்தலிங்கம், கோவை செந்தில் , சைக்கிள் மணி, ராஜ் கிருஷ்ணா​ ஆகியோரும் நடித்துள்ளனர் .

பெற்றோரை போற்ற வேண்டும் என்ற தலைப்பில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சுப்பாராஜூவை​ நடிகர்கள் ராதாரவி, கரிகாலன், எடிட்டர் மோகன், கதாசிரியர் ஆரூர் தாஸ் மற்றும் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார்கள்​.