ஆந்திராவில் என் அட்ரஸைக் காலி பண்ணிட்டாரே! – செல்வராகவன் பற்றி அனுஷ்கா அடித்த கமெண்ட்!

DSC_0206

தயாரிப்பாளர்களின் பணத்தை காலி பண்ண வேண்டும் என்று சபதம் எடுத்திருக்கிறாரோ!

– என்று ரசிகர்களை சந்தேகப்பட வைக்குமளவுக்கு தொடர்ச்சியாய் தோல்விப்படங்களை எடுப்பதில் சாதனை படைத்து வரும் செல்வராகவனின்….சமீபத்திய சாதனைப் படம் – இரண்டாம் உலகம்.

இந்தப் படத்தில் என்ன சொல்ல வர்றாரு என்று புரியாமல் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் ரசிகர்களில் பாதி பேர் டாஸ்மாக் கடைக்கும், மீதி பேர் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கும் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

வெயிட்..மக்களே!

இந்த செய்தி ‘இரண்டாம் உலகம்’ படம் பற்றியது அல்ல!

அதன் தெலுங்கு டப்பிங்கான ‘வர்ணா’ படம் பற்றியது.

அதாவது, ‘இரண்டாம் உலகம்’ படத்தில், இரண்டாம் உலகத்தில் இருக்கும் அனுஷ்கா கதாபாத்திரத்தின் பெயர்தான் வர்ணா.
ஆந்திராவில் ஆர்யாவை…யார்யா? என்று கேட்பார்கள். அந்தளவுக்குத்தான் சாருக்கு அங்கே மார்க்கெட்…!

ஆந்திராவைப் பொருத்தவரை மார்க்கெட், மதிப்பு, பிசினஸ், ஓபனிங் எல்லாமே அனுஷ்காவுக்குத்தான். எனவே பப்ளிஸிட்டிகளில் ஆர்யாவை டம்மியாக்கிவிட்டு, அனுஷ்காவுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்.

அதோடு, அவரது கதாபாத்திரத்தின் பெயரையே படத்துக்கும் வைத்தார்கள்.

அனுஷ்காவை ஒரு தடவையாவது…………………..என்று பைத்தியம் பிடித்து அலையும் ஆந்திர மக்கள் ‘வர்ணா’ படத்தை வாகை சூடு வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்படி எல்லாம் செய்தார் செல்வராகவன்.

ஆனால் நடந்ததோ வேறு. வர்ணா படத்தின் முதல் காட்சி முடிந்த சில மணி நேரத்திலேயே படத்தைப் பற்றிய நெகட்டிவ் டாக் பரவிவிட்டது.

விளைவு..அங்கும் படம் சூப்பர் ப்ளாப்.

இதுவரை வெற்றிப்படங்களில் நடித்துக் கொண்டு நல்ல பெயரையும் சம்பாதித்து வைத்திருந்த அனுஷ்கா, வர்ணாவின் ரிப்போர்ட்டைக் கேட்ட பிறகு இடிந்துபோய், ஆந்திராவில் என் அட்ரஸைக் காலி பண்ணிட்டாரே! என்று சக நட்சத்திரங்களிடம் செல்வராகவன் பற்றி கமெண்ட் அடித்தாராம்!

பின் குறிப்பு: மேலே உள்ள கோடிட்ட இடங்களை ‘நேரில் சந்திக்க வேண்டும்’ என்ற வார்த்தைகளைக் கொண்டு நிரப்பிக் கொள்ளவும்.