தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு…. – படத்துறைக்கு கிடைத்தது பாவ விமோசனம்…

Nassar, Kamal, Rajini, Vishal @ Nadigar Sangam New Building's Foundation Laying Ceremony Stills

சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த திரைப்படக்கலைஞர்களுக்கான மாநில அரசு விருதுகளை கேரளா போன்ற மற்ற மாநிலங்கள் எல்லாம் குறித்தகாலத்தில் வழங்கி வருகின்றனர்.

தமிழக அரசு மட்டும் இந்த விஷயத்தில் மோசமான போக்கை கடைபிடித்து வருகிறது.

திரைப்படக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி கௌரவிக்க வேண்டிய திரைப்பட விருதுகள் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வழங்கப்படவே இல்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அவரது பெயரை உச்சரிக்கக் கூட தைரியமில்லாத அடிமைக்கூட்டமாக இருந்தனர் திரைப்படத்துறையினர்.

அதனால் தமக்கு வழங்கப்பட வேண்டிய திரைப்பட விருதுகளை ஏன் வழங்கவில்லை என்று கேட்கவே அஞ்சி நடுங்கினர்.

இந்நிலையில் ஜெயலலிதா இறந்துபோனதால் திரையுலகினருக்கு பாவவிமோசனம் கிடைத்திருக்கிறது.

அதன் ஒரு அங்கமாக 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளுக்கான தமிழ அரசின் திரைப்பட விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

2009 -ஆம் ஆண்டுக்கான விருதுகள்

சிறந்த படம்: பசங்க, சிறந்த நடிகர் : கரண் (மலையன்), சிறந்த நடிகை : பத்மபிரியா (பொக்கிஷம்), சிறந்த நடிகர் – சிறப்பு பரிசு : பிரசன்னா (அச்சமுண்டு அச்சமுண்டு), சிறந்த நடிகை – சிறப்பு பரிசு : அஞ்சலி (அங்காடி தெரு), சிறந்த வில்லன் நடிகர் : பிரகாஷ்ராஜ் (வில்லு), சிறந்த நகைச்சுவை நடிகர் : கஞ்சா கருப்பு (மலையன்), சிறந்த இயக்குனர் : வசந்தபாலன் (அங்காடித் தெரு), சிறந்த இசை அமைப்பாளர்: சுந்தர்.சி.பாபு (நாடோடிகள்)

2010-ஆம் ஆண்டுக்கான விருதுகள்!

சிறந்த படம் : மைனா, சிறந்த நடிகர் : விக்ரம் (இராவணன்), சிறந்த நடிகை அமலாபால் (மைனா), சிறந்த நடிகர் – சிறப்பு பரிசு : ஒய்.ஜி.மகேந்திரன் (புத்ரன்), சிறந்த நடிகை – சிறப்பு பரிசு : சங்கீதா (புத்ரன்), சிறந்த வில்லன் நடிகர் : எஸ்.திருமுருகன் (களவாணி), சிறந்த நகைச்சுவை நடிகர் : தம்பி ராமையா (மைனா), சிறந்த குணச்சித்திர நடிகர் : சமுத்திரக்கனி (ஈசன்), சிறந்த குணச்சித்திர நடிகை : சரண்யா பொன்வண்ணன் (களவாணி), சிறந்த இயக்குனர் : பிரபு சாலமன் (மைனா), சிறந்த இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா (பையா).

2011-ஆம் ஆண்டுக்கான விருதுகள்

சிறந்த படம் : வாகை சூடவா, சிறந்த நடிகர் : விமல் (வாகைசூடவா), சிறந்த நடிகை : இனியா (வாகைசூடவா), சிறந்த நடிகர் – சிறப்பு பரிசு : சிவகார்த்திகேயன் (மெரினா), சிறந்த நடிகை – சிறப்பு பரிசு : அனுஷ்கா (தெய்வத் திருமகள்), சிறந்த வில்லன் நடிகர் : பொன்வண்ணன் (வாகைசூடவா), சிறந்த நகைச்சுவை நடிகர் : மனோபாலா (பல படங்கள்), சிறந்த நகைச்சுவை நடிகை : தேவதர்ஷினி (காஞ்சனா), சிறந்த குணச்சித்திர நடிகர் : நாசர் (தெய்வத் திருமகள்), சிறந்த குணச்சித்திர நடிகை : லட்சுமி ராமகிருஷ்ணன் (உச்சிதனை முகர்ந்தால்), சிறந்த இயக்குனர் : விஜய் (தெய்வத் திருமகள்), சிறந்த இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் (கோ).

2012-ஆம் ஆண்டுக்கான விருதுகள்

சிறந்த படம் : வழக்கு எண் 18/9, சிறந்த நடிகர் : ஜீவா (நீதானே என் பொன் வசந்தம்), சிறந்த நடிகை : லட்சுமி மேனன் (கும்கி, சுந்தரபாண்டியன்), சிறந்த நடிகர் – சிறப்பு பரிசு : விக்ரம் பிரபு (கும்கி), சிறந்த நகை – சிறப்பு பரிசு : சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்), சிறந்த வில்லன் நடிகர் : விஜய்சேதுபதி (சுந்தரபாண்டியன்), சிறந்த நகைச்சுவை நடிகர் : சூரி (மனம் கொத்தி பறவை), சிறந்த நகைச்சுவை நடிகை : ஆர்த்தி (பாரசீக மன்னன்), சிறந்த குணச்சித்திர நடிகர் : நரேன் (மனம் கொத்தி பறவை), சிறந்த குணச்சித்திர நடிகை : ரேவதி (அம்மாவின் கைபேசி), சிறந்த இயக்குனர் : பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9), சிறந்த இசை அமைப்பாளர் : டி.இமான் (கும்கி).

2013-ஆம் ஆண்டுக்கான விருதுகள்

சிறந்த படம் : ராமானுஜன், சிறந்த நடிகர் : ஆர்யா (ராஜா ராணி), சிறந்த நடிகை : நயன்தாரா (ராஜா ராணி), சிறந்த நடிகர் – சிறப்பு பரிசு : விஜய்சேதுபதி (பண்ணையாரும் பத்மினியும் மற்றும் இதற்குதானே ஆசைப்பாட்டாய் பாலகுமாரா), சிறந்த நடிகை – சிறப்பு பரிசு : நஸ்ரியா (நேரம்), சிறந்த வில்லன் நடிகர் : விடியல் ராஜ் (ஆள்), சிறந்த நகைச்சுவை நடிகர் : சத்யன் (ராஜா ராணி), சிறந்த நகைச்சுவை நடிகை : துளசி (பண்ணையாரும் பத்மினியும்), சிறந்த இயக்குனர் : ராம் (தங்கமீன்கள்), சிறந்த இசை அமைப்பாளர் : ரமேஷ் விநாயகம் (ராமானுஜன்).

2014-ஆம் ஆண்டுக்கான விருதுகள்

சிறந்த படம் : குற்றம் கடிதல் , சிறந்த நடிகர் : சித்தார்த் (காவியத்தலைவன்), சிறந்த நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை), சிறந்த நடிகர் – சிறப்பு பரிசு : பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா), சிறந்த நடிகை – சிறப்பு பரிசு : ஆனந்தி (கயல்), சிறந்த வில்லன் நடிகர் : பிருத்திவிராஜ் (காவியத்தலைவன்), சிறந்த நகைச்சுவை நடிகர் : கே.ஆர்.சிங்கமுத்து (பல்வேறு படங்கள்), சிறந்த குணச்சித்திர நடிகர்: நாசர் (காவியத்தலைவன்), சிறந்த குணச்சித்திர நடிகை : குயிலி ( காவியத்தலைவன்), சிறந்த இயக்குனர் : ராகவன் (மஞ்சப்பை), சிறந்த இசை அமைப்பாளர் :
ஏ.ஆர்.ரஹ்மான் (காவியத்தலைவன்).