ஒரே நாளில் அஞ்சலி நடித்த 2 படங்கள் ரிலீஸ்

IMG_7843.jpg-2

முன்னணி நடிகைகளில் ஒருவரான அஞ்சலி கடைசியாய் தமிழில் நடித்த படம் – சேட்டை.
ஆர்யா ஹீரோவாக நடித்த இந்தப்படம் 2013  ஆம் வருடம் வெளியானது.
அதே வருடம் வெளியான, சிங்கம் -2 படத்தில் ஒரேஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடினார்.
அதன் பிறகு அவர் தமிழில் நடிக்கவே இல்லை.
அவரது சித்தி உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிய அஞ்சலி ஹைதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார்.
அதன் பிறகு அவ்வப்போது சென்னை வந்து தமிழ்ப்படங்களில் நடித்துவிட்டு செல்கிறார்.
அப்படி அஞ்சலி நடித்த தமிழ்ப்படங்கள் இரண்டு.
ஒன்று… விமல் நடிக்கும் மாப்ள சிங்கம்.
இரண்டு.. ஜெயம்ரவிக்கு ஜோடியாக  நடிக்கும் அப்பாடக்கர்.
இரண்டு படங்களுக்கும் மாற்றி மாற்றி கால்ஷீட் கொடுத்த அஞ்சலி சொன்ன தேதிகளில் கரெக்ட்டாக படப்பிடிப்பில் ஆஜராகி இரண்டு படங்களையும் முடித்துக் கொடுத்தார்.
அஞ்சலியே எதிர்பார்த்திராத ஒரு விஷயம் தற்போது நடக்க உங்ளளது.
அதாவது மாப்ள சிங்கம் படமும், அப்பாடக்கர் படமும் ஒரே தினத்தில் ஜூலை 31 அன்று வெளியாக உள்ளது.
இதை எண்ணி பூரிப்பில் இருக்கிறாராம் அஞ்சலி.
அவரது இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் அவர் நடித்து ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனதே இல்லையாம்.