இசைத்திருட்டை மறைக்க அனிருத் வெளியிட்ட வீடியோ…

anirudh1

ரஜினி நடிக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிவரும் ‘பேட்ட’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் உடன் கூடிய மோஷன் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது.

அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் என்பதால், இந்தப் படத்தின் இசைக்குப் பயங்கர எதிர்பார்ப்பு எழுந்தது.

அதற்கு அனிருத் இசையமைத்திருக்கும் பின்னணி இசை பாராட்டைக்குவித்த சில மணி நேரத்தில் அந்த இசை எங்கிருந்து திருடப்பட்டது என்ற தகவல் ஆதாரத்துடன் வெளியானது.

அதாவது பைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்திலிருந்து அந்த இசையை காப்பியடித்திருந்தார் அனிருத்.

இதனால் சமுகவலைத்தளங்களில் அனிருத்தை கழுவி ஊற்றினார்கள்.

ரஜினியின் பெயரைக் கெடுத்துவிட்டார் என்றும், இவரா இந்தியன் -2 படத்துக்கு இசையமைப்பாளர்? வௌங்கிடும் என்றெல்லாம் அனிருத்தை வெளுத்து வாங்கினர்.

இந்நிலையில், பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள இசை உருவானவிதத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டார் அனிருத்.

அந்த வீடியோவில், இசைக்கலைஞர்கள் சாக்ஸபோன் இசைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள இசை தன்னுடைய சொந்த சரக்குதான் என்பதை நிரூபிக்க முயன்றுள்ளார்.

காப்பியடித்த இசையை அனிருத்தின் குழுவினர் வாசிப்பதால் அது ஒரிஜினல் இசையாகிவிடுமா?