அஜித் தமிழன் அல்ல, ரசிகர்கள் அவரை புறக்கணிக்க வேண்டும்….!

ajith (1)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் திரைப்படத்துறையினர் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன அறவழிப் போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி போன்ற திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, கார்த்தி, விஷால், உட்பட முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முக்கியமாக காலை ஒன்பது மணிக்கு முதல் ஆளாக போராட்டக்களத்துக்கு வந்த நடிகர் விஜய், ஒரு நிமிடம் கூட அங்கிருந்து அகலாமல் போராட்டம் முடியும்வரை அங்கேயே இருந்தார்.

இந்தப்போராட்டத்தில் எதிர்பார்த்ததுபோலவே, அஜித்குமார் கலந்து கொள்ளவில்லை – வழக்கம்போல்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் அஜித், எந்த சினிமா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை.

நடிகர் சங்கத்தின் தேர்தலில் வாக்களிக்க வரவில்லை.

நடிகர் சங்கத்தின் பூமி பூஜையிலும் கலந்து கொள்ளவில்லை.

அதே அணுகுமுறையை தமிழ்மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக நடைபெறும் போராட்டத்தில் கூட கலந்து கொள்ள மாட்டேன் என்று அஜித் பிடிவாதமாக இருப்பது திரைத்துறையில் உள்ள தமிழ் உணர்வாளர்கள்  மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

”அஜித்தின் அப்பா கேரளாவைச் சேர்ந்தவர்… அவருடைய அம்மா பஞ்சாபை சேர்ந்தவர். அப்படிப்பட்ட அஜித்திடமிருந்து தமிழ் உணர்வை எதிர்பார்ப்பது நம்முடைய முட்டாள்தனம்தான்” என்று கொந்தளித்த முன்னணி நடிகர் ஒருவர், ”இதை அஜித்தின் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்… அவரை புறக்கணிக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

நியாயமான கோரிக்கைதான்…!