அஜித்தும் சிவாவும் நான்காவது முறையாக இணையும் படம் வீரம்-2வா ? விவேகம்-2வா?

vivegam1


சிவா நடிப்பில் அஜித் நடித்த ‘விவேகம்’ படம் கமர்ஷியலாக மிகப்பெரிய தோல்வியடைந்தது.

விவேகம் படத்தினால் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் போட்ட முதலீட்டில் 30 கோடிக்கு மேல் இழந்து மிகப்பெரிய நஷ்டமடைந்துள்ளனர்.

சுமார் 75 கோடியில் விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் 25 கோடிக்கு லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தது.

ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது மட்டுமல்ல, 25 கோடிக்கு மேல் பணத்தை இழந்தது.

லிங்கா படத்தில் நஷ்டமடைந்தவர்கள் ரஜினியிடம் நஷ்டஈடு கேட்டு போராடியதைப்போல், விவேகம் படத்தில் நஷ்டப்பட்டவர்கள் அஜித் வீட்டை நோக்கி அணிவகுக்கத் திட்டமிட்டனர்.

இந்த விஷயத்தை அறிந்ததும் பதறிப்போன சத்யஜோதி நிறுவனம், விநியோகஸ்தர்களை சமாதானப்படுத்தியது.

அஜித்திடம் பேசி, அடுத்த படத்தையும் நாங்களே தயாரித்து உங்கள் நஷ்டத்தை ஈடுகட்டுகிறோம் என்ற வாக்குறுதி அளித்தது.

அதன்படி அஜித்தை சந்தித்து மீண்டும் கால்ஷீட் கேட்டது.

சத்யஜோதி நிறுவனம் சிக்கலில் மாட்டியிருப்பதையும், அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை என்றால் நம்முடைய அடுத்த படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பிரச்சனை செய்வார்கள் என்பதை உணர்ந்த அஜித், இந்தப் பிரச்சனையை சமாளிக்க ஒரே வழி மீண்டும் சத்யஜோதிக்கு கால்ஷீட் கொடுப்பதுதான் என்பதை புரிந்து கொண்டார்.

அதன்படி, அஜித்குமாரின் 58-ஆவது படமாக உருவாகவிருக்கும் படத்தையும் ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

விவேகம் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்தாலும், அஜித் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ளவில்லை.

விவேகம் படத்துக்கு வாங்கிய அதே 35 கோடி சம்பளம்தான் புதிய படத்துக்கும் வாங்குகிறார்.

அட்வான்ஸ் 15 கோடி, படத்தை முடித்த பிறகு 20 கோடி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை விவேகம் சிவாவே இயக்குகிறார் என்பதுதான் அதிர்ச்சி தகவல்.

சிவாதான் இயக்குநர் என்று அஜித் சொன்னதும், சத்யஜோதி நிறுவனம் தன் அதிருப்தியை தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களின் எதிர்ப்பை அஜித் சட்டைப்பண்ணவில்லையாம்.

இந்த தகவல் வெளியானதும், விவேகம் படத்தை வாங்கி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் கூட அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளருக்கு ஒரே ஆறுதல்….அஜித்-58 படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இல்லை என்பதுதான்.

விவேகம் படத்தில் அனிருத்தின் இசை எடுபடாதது மட்டுமல்ல, படத்தின் தோல்விக்கும் காரணமானது.

எனவே அனிருத் வேண்டாம் என அஜித்தே சொல்லிவிட்டாராம்.

இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் இப்படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அஜித்தும் சிவாவும் நான்காவது முறையாக இணையும் அஜித்-58, வீரம்-2வா இருக்குமா? அல்லது விவேகம்-2வாக இருக்குமா?