அச்சம் தவிர் – விஜய் டிவியில் அதிரடியான விளையாட்டு நிகழ்ச்சி

DD1

விஜய் டிவியில் ஒரு புத்தம் புதிய அதிரடியான விளையாட்டு நிகழ்ச்சி அச்சம் தவிர், வரும் ஜூன் 02ம் தேதி முதல் வியாழன் – ஞாயிறு ஒளிபரப்பாக உள்ளது.

இதுவரை வந்த ரியாலிட்டி  நிகழ்ச்சிகளில்  சின்னத் திரை நட்சத்திரங்கள் ஆடல், பாடல், விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் , தைரியமாக டாஸ்க்குகளை செய்து முடிக்கும் நிகழ்ச்சிகளில் கூட கண்டு இருக்கிறோம். அச்சம் தவிர் நிகழ்ச்சியானது சின்னத் திரை நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் வெள்ளி திரை நட்சத்திரங்களும் பங்கேற்கும் ஒரு  நிகழ்ச்சியாக அமையும்.

இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் அனைத்தும் கடினமாணதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். ஆனால் அனைத்தும் பாதுகாப்பான சூழலில், தேர்ந்த தொழில்முறை பயிற்சியாளர்கள் உதவியுடன் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகும் பெண் நட்சத்திர போட்டியாளர்கள் நடிகை சோனியா அகர்வால், நடிகை காயத்ரி ஜெயராமன், நடிகை சஞ்சனா சிங், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் நாயகி- நடிகை காயத்ரி, நடிகை மதுமிலா, பிரியங்கா தேஷ்பாண்டே, ‘மெட்டி ஒலி’ காயத்ரி மற்றும் ஆண் நட்சத்திர போட்டியாளர்கள் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் , மா கா பா ஆனந்த், நாடோடிகள் படத்தின் புகழ்- நடிகர் பரணி, சரவணன் மீனாட்சி புகழ் செந்தில், அமுதவாணன், சரவணன் மீனாட்சி புகழ் – சித்தார்த் மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை புகழ்- அமித் பார்கவ் ஆவர்.

இந்நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஒரு சுவாரசியமான அனுபவமாக இருக்கும். இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் கண்டிராத ஒரு நிகழ்ச்சியாக அமையும், மொத்தத்தில் அதிரடியும் பொழுதுபோகும் கலந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சிக்கு தொகுபாளர் என்பவர் போட்டியாளர்கள் பயத்தை எதிர்கொள்ளும்போது விடா முயற்சியுடன் டாஸ்க்குகளை கையாள ஊக்கப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தொகுப்பாளர் தான் திவ்ய தர்ஷினி (டிடி). அதே சமயத்தில் அவரின் துறு துறு பேச்சு, நிகழ்ச்சியை மேலும் கல கலப்பாக்கும்.

காணத்தவறாதீர்கள் வரும் வியாழன் முதல் இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் .