பா.ரஞ்சித் குறித்து ஒரு பதிவு…

Director-PA-Ranjith

நேற்றைய news 7 வியூகம் நேர்காணலில் பா.இரஞ்சித் அவர்களின் பேட்டியை பார்த்தேன். பா.இரஞ்சித் அவர்களை பல்வேறு நிலைகளில் நான் விமர்ச்சிப்பதால் ஒரு தோழர் இப்பேட்டியை பார்க்குமாறு பணித்தார்.

இப்பேட்டியை பார்த்தப் பின்பு இன்னும் பல்வேறு கேள்விகள் எமக்குள் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

1836-1900 ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அயோத்திதாச பண்டிதரின் சிந்தனைகளை முன் வைத்து பேசும் இரஞ்சித் பின் பேச்சின் இடையே அண்ணல் அம்பேத்கரை பின்பற்றுவதாக கூறுகிறார்.

அயோத்திதாசர் மற்றும் அம்பேத்கரின் தியாகங்களையும், தத்துவ அரசியலையும் நாம் எந்நாளும் போற்றிடவும், முன்னெடுக்க வேண்டியவையுமே ஆகும்.

ஆனால் தமிழ் மண்ணில் சாதி ஒழிப்பு குறித்து பேசுகிற இரஞ்சித் தன் அரைமணி நேர பேட்டியில் இந்நூற்றாண்டின் மாபெரும் சாதி ஒழிப்பு போராளி தந்தை பெரியாரை எங்கும் குறிப்பிடாத காரணம் என்னவோ?

(இப்படிக் கேட்டால் நினைவில் இல்லை என சுலபமாக கடப்பதா நேர்மை)

சாதிகள் ஒழிய போராடும் இரஞ்சித் தலித்திய தலைவர்களை மட்டுமே முன்னிறுத்தி பேசுவதா சாதி ஒழிப்புப் பணி?

இல்லவேயில்லை, மாறாக சாதி மறந்த ஒடுக்கப்பட்ட மக்களின் தலித்திய சாதி உணர்வை தூண்டி தன்னோடு ஒன்றினைக்கும் முயற்ச்சியே இரஞ்சித்தின் செயலாக கருத வேண்டியுள்ளது.

ஏனெனில்..,

தமிழ் மண்ணில் உண்மையான சாதி ஒழிப்பு விரும்புகிற எவரும் பெரியாரியலை தவிர்க்க இயலாதென்பதே உண்மை.

1980க்குப் பிந்தைய சாதிவெறி பற்றி உள்நோக்குடன் மிக எச்சரிக்கையாய் பேசும் இரஞ்சித், 2018ல் உருவாகியுள்ள ஆன்மீக அரசியல் ஆபத்தை கண்டிக்காமல் கடந்துவிடுவதில் தான் அவரை அடையாளம் காண முடியும்.

தொழில்முறை அடிப்படையில் இரஜினியை முன்னிறுத்துகிற இரஞ்சித் அவர்கள் அரசியல் அடிப்படையில் ரஜினி குறித்த தன்னிலையை தெரிவிக்க வேண்டிய கடமையை மறைப்பதே இவரின் நேர்மை குறித்து விவாதிக்க வைக்கிறது.

பேச்சின் ஊடே தன்னை எதிப்பவர்கள் அனைவருமே சாதிவெறியர்கள் என்பதைப் போன்ற பேச்சு ஆபத்தான போக்காகும்.

இன்னும் தெளிவாக சொல்வதானால் இரஜினியின் ஆன்மீக அரசியல் ஏற்படுத்தும் விளைவும், இரஞ்சித்தின் தலித்திய அரசியல் ஏற்படுத்தும் விளைவும் சமூகத்திற்க்கு கேடு பயப்பவையே!

இரண்டு மூன்று வெற்றிப் படங்களை தயாரித்து விடுவதாலேயே தத்துவ ஞானிகளாய் தான் சார்ந்த சமூகத்தால் ஆக்கப்படுவதாலேயே இவர்களுக்குள் வருகிற “தலைமை ஆசை” இவர்களை ஆட்டுவிப்பதும் இந்நாட்டின் கேடு!

தலித் குறித்து எவர் பேசினாலும் உடனே தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடுவதும்,
அவர்களை எதிர்த்தால் தலித்விரோத முத்திரை குத்துவதும் சாதி உணர்வாளரென்பது போன்ற புளிச்சுப்போன வாதத்தை முன்னெடுப்பதைக் காட்டிலும்,சாதி ஒழிப்பு குறித்து பேசுவோரின் தத்துவ அரசியல் ஆய்ந்து ஆதரவளிப்பதே

சாதி கடந்த சாதி ஒழிப்பாகும்.

– மு.தமிழ் மறவன்.