ஒரு கோடி சம்பளம் வேணும்… – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்?

aarav-copy

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகம் காட்டியவர்களில் ஓவியா போன்ற ஒரு சிலருக்கே அதிர்ஷ்டக்காற்று அடித்திருக்கிறது.

காயத்ரி ரகுராம், பரணி, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, சக்திவாசு, காஜல், வையாபுரி, அனுயா, நமிதா, கணேஷ் வெங்கட்ராம் போன்றவர்களுக்கு பெரிய நன்மை விளையவில்லை.

ஓவியா அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவு நல்ல பெயர் வாங்கியவர் பிந்துமாதவி. ஆனாலும் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வரவில்லை. காரணம்… அவரைச்சுற்றி பின்னப்பட்டிருக்கும் மாயவலை.

அவரை திரையுலகினர் அணுகுவதே சிரமம் என்பதால் எத்தனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் பிந்துமாதவியினால் சினிமாவில் மின்ன முடியாது.

பாடலாசிரியர் சினேகன் வழக்கம்போல் பாடல் எழுதுவதில் பிசியாகிவிட்டாலும் இன்னொரு பக்கம் ஹீரோவாக நடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

விளம்பரப்படங்களில் நடித்து வந்த பிரபல மாடலான ரைசா தற்போது சில படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அநியாயத்துக்கு நெகட்டிவ்வாக விமர்சிக்கப்பட்ட ஜூலி தற்போது சின்னத்திரையில் பிசியாகி வருகிறார்.

இறுதிச்சுற்றுவரை வந்த போட்டியாளர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண், அதற்கு முன் ‘சிந்துசமவெளி’, ‘பொறியாளன்’, ‘வில் அம்பு’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவ்வளவாக பிரபலமாகவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகம் காட்டிய பிறகு படத்துறையினரின் பார்வை இவர் பக்கம் திரும்பியிருக்கிறது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

‘கிரகணம்’ படத்தை இயக்கிய இளன் என்பவர் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடிப் படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா நடிக்கிறார்.

பிக்பாஸ் போட்டியாளர்களின் தற்போதைய நிலை இப்படியாக இருக்க, பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரவ்வின் நிலை என்ன?

படத்தில் நடிக்க ஆரவ்வை அப்ரோச் பண்ணினால், கதையைக் கூட கேட்காமல் எடுத்த எடுப்பிலேயே ஒரு கோடி சம்பளம் கேட்கிறாராம்.

இதற்கு ஓகே என்றால்தான் கதையைக் கேட்பேன் என்றும் கண்டிஷன் போடுகிறாராம்.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள நினைத்து பேராசைக்காரராகிவிட்டாரா ‘பிக்பாஸ்’ ஆரவ்?