6 இயக்குநர்கள் இயக்கும் 6 அத்தியாயம்

6-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் அவ்வப்போது செய்யப்படுவது உண்டு.
அப்படி ஒரு வித்தியாசமான முயற்சி….’6 அத்தியாயம்’.

சோலோ,  டேவிட், அவியல் போல் பல குறும்படங்களை ஒன்றிணைத்து வெளியிடப்படும் ‘ஆன்த்தாலஜி’ படங்களாக இல்லாமல் ‘6 அத்தியாயம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட 6 அத்தியாயங்கள் படத்தை, ஆறு இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

இந்த ஆறு கதைகளின் முடிவும் வழக்கம்போல அந்தந்த அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தின் இறுதியில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது.

‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இந்தப்படத்தை தயாரித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், சுரேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன், கேபிள் சங்கர், அஜயன் பாலா ஆகியோர் 6 அத்தியாயம் படத்தை இயக்கியுள்ளார்கள்.

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் தமன், விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத், பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

ப்ரோமோ பாடலை ‘விக்ரம் வேதா’புகழ் சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார்.

இந்தப்பாடலை விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.