ஷங்கரின் 2.0  – உருவாக்கத்தில் மட்டுமல்ல, திட்டமிடலிலும் ஹாலிவுட் அப்ரோச்…

2-0

பிரம்மாண்டமான படத்தைப் பார்த்தால் உடனே ஹாலிவுட் படம்போல் இருக்கிறது என்று பாமர ரசிகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

அவர்கள் மட்டுமல்ல, அமெச்சூர் விமர்சகர்களும் கூட பிரம்மாண்டமான படங்களை இப்படித்தான் பாராட்டித்தள்ளுகிறார்கள்.

ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு என்ற பாராட்டை தமிழில் அடிக்கடி பெற்றவர் அனேகமாக இயக்குநர் ஷங்கராகத்தான் இருப்பார்.

மேக்கிங் ஸ்டைலும், பிரம்மாண்டமும் ஷங்கருடைய படங்களுக்கு நிரந்தரமாகவே ஹாலிவுட் முத்திரையை குத்த வைத்துவிட்டன.

இதுவரை இயக்கிய அத்தனை படங்களையும் மிஞ்சுகிற அளவுக்கு ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ (எந்திரன்-2) படத்தை பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறார் ஷங்கர்.

ரஜினிகாந்துடன் எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் நடிக்கும் 2.0’ படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் அதாவது சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருpகறது -’லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம்.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிறார்

2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

இன்னொரு பக்கம் ஆடியோ, டீஸர், டிரைலர் வெளியிட்டுக்கான வேலைகளையும் பக்காவாக திட்டமிட்டு செய்து வருகின்றனர் 2.0 படக்குழுவினர்.

சில மாதங்களுக்கு முன் மும்பையில் ‘2.0’ படத்தின் ஃபர்ஸ்ட லுக் வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்திய லைகா புரடக்ஷன்ஸ், அடுத்து இப்படத்தின் ஆடியோ, டீஸர், டிரைலர் வெளியீட்டு விழாக்களையும் மிகப் பிரம்மாண்டமானமுறையில் நடத்தும் பணியை தொடங்கிவிட்டது.

2.0 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை அக்டோபர் மாதம் துபாயிலும், டீஸர் வெளியீட்டு விழாவை நவம்பர் மாதம் ஹைதராபாத்திலும், அதனை தொடர்ந்து டிரைலர் வெளியீட்டு விழாவை டிசம்பர் மாதம் சென்னையிலும் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த தகவல்களை லைகா புரடக்ஷன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘2.0’ ஜனவரி மாதம் 25 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது.

பிரம்மாண்டமாக படம் எடுப்பது மட்டுமல்ல, ஒரு படத்துக்கு பிள்ளையார் சுழிபோடும்போதே, அப்படத்தின் ஒவ்வொரு பணிகளையும் முன்கூட்டியே திட்டமிடுவதுதான் ஹாலிவுட் ஸ்டைல்.

அந்த அடிப்படையில் பார்த்தால்… ஷங்கரின் 2.0 உருவாக்கத்தில் மட்டுமல்ல, தயாரிப்பு தரப்பின் திட்டமிடலிலும் ஹாலிவுட் பாணியிலேயே உருவாகி வருகிறது.

லைகாவின் அப்ரோச்சுக்கு லைக் போடலாம்…